ஜோகன்னஸ்பர்க்: இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது தென்னாப்பிரிக்க அணி.

முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 157 ரன்கள் மட்டுமே எடுக்க, தென்னாப்பிரிக்க அணி 302 ரன்கள் எடுத்து 145 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி 211 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் கருணரத்னே 103 ரன்கள் அடித்தார்.

அதற்கடுத்து, நிரோஷன் டிக்வெல்லா 36 ரன்கள் அடிக்க, அந்த அணியால் 211 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

நியூசிலாந்தின் லுங்கி நிகிடிக்கு 4 விக்கெட்டுகளும், லுதோ சிபாம்லாவுக்கு 3 விக்கெட்டுகளும், ஆன்ரிச் நார்ட்ஜேவுக்கு 2 விக்கெட்டுகளும் கிடைத்தன.

இறுதியாக, வெறும் 67 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய தென்னாப்பிரிக்க அணி, ஒரு விக்கெட்டையும் இழக்காமல், 67 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை ஈட்டியது.

இதன்மூலம் இந்த டெஸ்ட் தொடரை முழுமையாக வென்று, இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது தென்னாப்பிரிக்க அணி.