இந்திய வீரர் கே.எல்.ராகுலுக்கு ‘சுளுக்கு’ – டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து விளையாட முடியாது

Must read

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் கே.எல். ராகுல் வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவரது இடது கையில் ஏற்பட்ட சுளுக்கு காரணமாக அடுத்து வரும் போட்டிகளில் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ராகுலுக்கு மூன்று வாரம் ஓய்வு தேவை படுவதால் அவர் தொடர்ந்து விளையாடமாட்டார் என்றும், பெங்களூரில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புத்துணர்வு முகாமில் தங்கி சிகிச்சை பெறுவார் என்று பி.சி.சி.ஐ. தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

உடனடியாக நாடு திரும்ப இருக்கும் ராகுல் பெங்களூரு சென்று சுளுக்கிற்கான சிகிச்சை எடுத்துக்கொள்வார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

காயம் காரணமாக ஐ.பி.எல். தொடர் முடிந்து ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் பங்கேற்க முடியாத ரோஹித் சர்மா, இஷாந்த் சர்மா ஆகியோர், துபாயில் இருந்து நேரடியாக இந்தியா வந்தனர்.

இந்தியா வந்த ரோஹித்-க்கு வழங்கப்பட்ட சிகிச்சையை தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாட டிசம்பர் 16 ம் தேதி ஆஸ்திரேலியா சென்றார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்த போது, காயம் காரணமாக முகம்மது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய இருவரும் காயம் காரணமாக பெங்களூரு திரும்பினர்.

ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டி முடிந்ததும் இந்திய அணி கேப்டன் விராட் கோலியும் நாடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

காயம் காரணமாக இந்திய அணி வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக உடற்தகுதி இழந்து மூட்டை கட்டிக்கொண்டு நாடு திரும்பி வருவது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 7 ம் தேதி சிட்னி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

கடைசி போட்டி குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள ப்ரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது, கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அந்த மாகாணத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் நிலவி வருகிறது.

அடுத்து வரவிருக்கும் இந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா வென்று தொடரை கைப்பற்றுமா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

More articles

Latest article