மும்பை:
சமீப காலமாக தொடர்ந்து வெற்றிகளை குவித்துவரும் இந்தி கிரிக்கெட் வீர்ர்களுக்கு சவால்கள் காத்திருக்கின்றன என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
சமீப நாட்களாக. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 என அனைத்து வகையான போட்டிகளிலும் இந்தி கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி வருகிறது.
இதற்கிடையே, இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 5-ந்தேதி கேப்டவுனில் துவங்குகிறது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ஒருநாள் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இதில் ஒரு போட்டியை தவிர மற்ற 5 ஆட்டங்களும் பகல்-இரவு போட்டியாக நடைபெற உள்ளது. தொடர்ந்து, பிப்ரவரி 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி நேற்று புறப்பட்டு சென்றது. அப்போது செய்தியாளர்களிடம் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்ததாவது:
“கடந்த சில வருடங்களாக இந்திய அணி வீரர்களுடன் பயணம் செய்துள்ளேன். அவர்கள் சமீப காலமாக மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார்கள். .
ஆனால் நான் அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால், வரும் ஒன்றரை ஆண்டுகள் உங்கள் ஆட்டங்களுக்கு கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன் ஆஸ்திரேலியா சென்ற போது நன்றாக விளையாடினோம். இதேபோல் இங்கிலாந்து, இலங்கையிலும் நன்கு விளையாடினோம்.
தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துடன் இந்திய அணி மோத இருக்கின்றது. ஆகவே இந்த 18 மாத காலத்தில் இந்திய அணியினர் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன்” என தெரிவித்தார். .