தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி இன்று தனது முதல் ஒரு நாள் போட்டியை ஆடி வருகிறது.
முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு 297 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஓப்பனிங் பேட்ஸ்மேன்-களாக டி காக் மற்றும் மலன் களமிறங்கினர் அணியின் ஸ்கோர் 19 ரன்களாக இருந்த போது 6 ரன்களுக்கு மலன் அவுட் ஆனார்.
17.4 ஓவரில் 68 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது தென் ஆப்பிரிக்கா.
நான்காவது விக்கெட்டுக்கு தெம்பா பவுமா-வுடன் ஜோடி சேர்ந்த வேன் டெர் டுசென் 183 ரன்களில் 204 ரன்கள் குவித்து அணியை பலப்படுத்தியதோடு இந்தியாவுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்திருக்கின்றனர்.
தெம்பா பவுமா 143 பந்துகளில் 110 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் அவுட்டானார்.
வேன் டெர் டுசென் 96 பந்துகளில் 9 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 129 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.