இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ் அறிஞரும் எழுத்தாளருமான கந்தசாமி குப்புசாமி காலமானார். அவருக்கு வயது 103 . தென்னாப்பிரிக்க அரசுக்கு பரிந்துரை செய்து தமிழைவிருப்பப்பாடமாக மேல்நிலைப் பள்ளைகளில் கொண்டுவந்த பெருமை குப்புசாமியைச் சேரும்.
தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய வம்சாவழியினர் அவரது மறைவினை ஒட்டி துக்கம் அனுசரிக்கின்றனர்.
ஆசிரியராய் பணியினைத்துவங்கி, ஆய்வாளராய் இந்தியக் கல்வி த் துறையில் பணியாற்றியவர்.
தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் தமிழர்களின் கல்விக் குறித்த புத்தகங்களின் ஆசிரியர் இவர்.
அவற்றுள் சில: இந்திய கல்வி, சமயம், சடங்குகள் மற்றும் தென்னாப்பிரிக்க இந்தியர்களின் கலாச்சாரம் – சிறு வரலாற்று எனும் நூலும் தமிழின் மூன்றுத் தூண்கள் எனும் நூலும் இன்றும் அனைவராலும் விரும்பிப் படிக்கப்படுகின்றது.
தென்னாப்பிரிக்க தமிழ் கூட்டமைப்பு மூலம் இவர்மூலம் தமிழ் எழுத்துகள் அச்சிடப்பட்டு அனைத்து பள்ளிகளும் பயன்படுத்த தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டர்பனில் அவர்து இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது.