கிரிக்கெட் சூதாட்டம் , மேட்ச் பிக்சிங் என இந்திய கிரிக்கெட் அணி தள்ளாடிய காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலமே அவ்வளவுதான் முடிந்தது என ஒட்டுமொத்த இந்தியாவும் பேசிய சமயத்தில் அணி தலைவருக்கான பொறுப்பை ஏற்று புதிய இந்திய கிரிக்கெட் அணியை கட்டமைத்து எதிர்கொண்ட சவாலான போட்டிகள் அனைத்திலும் வெற்றிக் கொடி நாட்டியவர் சௌரவ் கங்குலி.

சௌரவ் கங்குலி தற்போது இந்தியாவின் பிசிசிஐ தலைவராக பொறுப்பில் இருக்கிறார் .

தற்போது சௌரவ் கங்குலியின் பயோபிக் திரைப்படமும் உருவாகவுள்ளது. பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான LUV ஃபிலிம்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சௌரவ் கங்குலி தன்னுடைய பயோபிக் திரைப்படம் தயாரானால் அதில் தன்னுடைய கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். எனவே இந்த பயோபிக் திரைப்படத்தில் ரன்பீர் கபூர் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.