ரஜினிகாந்தின் இளையமகளான செளந்தர்யாவின் Hoote ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கவுள்ள இந்த செயலி 60 வினாடி ஆடியோக்களை பதிவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தாதா சாகிப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான குரல் பதிவுடன் இந்த செயலியை அறிமுகம் செய்து வைத்தார்.
தனது தந்தைக்கு தமிழில் அதிகம் எழுத தெரியாது எனவும், ஒரு முறை குரல் வழியாக செய்தி அனுப்பியதே இந்த செயலியை உருவாக்க காரணமாக இருந்தது என்று சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்தார்.
தமிழ், ஹிந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட 15 இந்திய மொழிகளிலும், 10 சர்வதேச மொழிகளில ‘ஹுட்’ வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார் சவுந்தர்யா. இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், “மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை சந்தித்து ‘Hoote’ App-ஐ பற்றி விவரித்து, அவருடைய வாழ்த்துகளை பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை சந்தித்து ' Hoote’ App.ஐ பற்றி விவரித்து , அவருடைய வாழ்த்துகளை பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/GBWh0waFkD
— soundarya rajnikanth (@soundaryaarajni) October 27, 2021