சென்னை: காதல் மணம் புரிந்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவின் மனைவி சவுந்தர்யாவை,  கணவருடன் செல்ல  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அனுமதி வழங்கியது.  ஆட்கொணர்வு வழக்கு விசாரணை முடித்து வைக்கப்பட்டதாகவும் அறிவித்தது.

காதல் திருமணம் செய்த கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பிரபு தனது மனைவி சவுந்தர்யாவை ஆஜர்படுத்தக்கோரி, அவரது தந்தை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுமீதான விசார நேற்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, இன்று சவுந்தர்யாவும், அவரது தந்தை சுவாமிநாதன்னு  இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகினார்.

விசாரணையைத் தொடர்ந்து, தந்தை மகள் இருவரும் கலந்துபேச நீதிமன்றம் அவகாசம் வழங்கியது. அதைத்தொடர்ந்து, சவுந்தர்யா தனது கணவருடன் செல்லலாம் என நீதிமன்றம் வழங்கியதுடன், ஆட்கொணர்வு மனுவையும் முடித்து வைத்தது.

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிரபு, சௌந்தர்யா என்ற இளம் பெண்ணை கடத்திவந்து, கடந்த திங்கள்கிழமை காதல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சௌந்தர்யாவின் தந்தை சாமிநாதன் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு மாணவியின் தந்தை எதிர்ப்பு தெரிவித்ததுடன், தனது மகள் சௌந்தர்யாவை எம்எல்ஏ பிரபு கடத்திச்சென்று மிரட்டி கட்டாய திருமணம் செய்துவிட்டதாகவும்  குற்றஞ்சாட்டியிருந்தார்.

எனவே அவர் தனது மகளை மீட்டுத்தரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதற்கிடையில், , நாங்கள் இருவரும் முழு விருப்பத்துடன் தான் திருமணம் செய்து கொண்டோம் என எம்எல்ஏ பிரபுவும், சவுந்தர்யாவும் தனித்தனியாக வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.