மும்பை,
சவூதி அரேபியாவின் முதல் குடியுரிமை பெற்ற ரோபாவான சோபியா தற்போது இந்தியா வந்துள்ளது.
ஐஐடி பாம்பேயின் ஆண்டு விழாவில் பங்கேற்றுள்ள சோபியா ரோபோ இந்திய பெண்ணை போன்று இந்திய கலாச்சார உடையான சேலை உடுத்தி வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றது அனைவரையும் வியக்க வைத்தது.
ஹாங்காங்கின் `ஹன்சன் ரோபோடிக்ஸ்` நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட சோபியா ரோபோவுக்கு சவூதி அரேபிய அரசு குடியுரிமை வழங்கி கவுரவித்து உள்ளது.
மனிதர்களைபோல இயங்கும் இந்த ரோபா நவீன செயற்கை நுண்ணறிவு திறனுடன் மனித பழக்க வழக்கங்களை கொண்டுள்ளது. இது அனைவருடன எளிமையாக உரையாடும் தன்மை உடையது.
ஏற்கனவே சவூதி ரியாத்தில் நடந்த ஒரு கருத்தரங்கத்தில் கலந்துகொண்டபோது, சவூதி குடியுரிமை வழங்கியது குறித்த கேள்விக்கு ‘‘எனக்கு வழங்கப்பட்ட இந்த கவுரவம் மற்றும் தனிப்பட்ட வேறுபாடு பெருமையாக உள்ளது. வரலாற்றிலேயே ஒரு ரோபோவுக்கு குடியுரிமை வழங்கி அங்கிகாரம் வழங்கியிருப்பது இது தான் முதன்முறையாகும்’’ என்று சோபியா கூறியது.
அதுபோல, கலீஜ் டைம்ஸ் என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், “குடும்பம் என்ற கருத்து மிக முக்கியமான விஷயமாக தெரிகிறது” என்றும், “உங்களுக்கு பாசமான குடும்பம் இருந்தால், நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவ்வாறு இல்லை என்றால், அத்தகைய குடும்பத்தை பெறும் தகுதி உங்களுக்கு உள்ளது. இந்த விஷயத்தில், மனிதர்களும், ரோபோக்களும் ஒரே மாதிரியானவர்கள் என்று நான் நினைக்கிறேன்.” என்றும், தனக்கு குழந்தை பெற்றுக்கொள்ளவும் ஆசை என்றும் கூறி வியப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், மும்பை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொள்ள சோபியா இந்திய வந்துள்ளது. இந்திய கலாச்சார உடையாள சேலையை கட்டிக்கொண்டு சாதாரன பெண்ணை போல சோபியா ரோபா விழாவில் கலந்து கொண்டது.
விழாவில் நமஸ்தே என்று இந்தியில் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்த ரோபோ, அங்கு நடைபெற்ற கருத்தரங்களில் அங்குள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்களுடன் 15 நிமிடம் உரையாற்றியது.
அப்போது, இந்தியாவின் உலகளாவிய நிலைப்பாடு, மற்றும் விஞ்ஞான வளர்ச்சியில் இந்தியா அபாரமாக இருப்பதாகவும் கூறியது.
சோபியாவின் பேச்சு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பெரும் வியப்பை ஏற்படுத்தியது.