டில்லி,

லைமறைவாகி பிறகு மருத்துவமனையில் கண்டெடுக்கப்பட்ட வி.எச்.பி. தலைவரை காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்து நலம் விசாரித்தனர்.

வி.எச்.பி. அமைப்பின் சர்வதேச தலைவர் பிரவீன் தொகாடியா மீது ராஜஸ்தான் மாநிலம் கங்காபூர் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கிறது. இவ்வழக்கில் அவரை கைது செய்ய ராஜஸ்தான் மாநில நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது.

இதனையடுத்து அம்மாநில காவலர்கள் குஜராத் காவலர்களுடன் பிரவீன் தொகாடியாவின் வீட்டிற்கு சென்றபோது அவரை காணவில்லை.

இசட் ப்ளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கும் அவர், தனியாக, தனது அலுவலகத்தில் இருந்து ஆட்டோவில் எங்கோ சென்றுவிட்டார் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் சுயநினைவற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

பிறகு அவர் ராஜஸ்தான் மற்றும் குஜராத் காவல்துறையினர் தன்னை மிரட்டியதாகவும், எண்கவுண்ட்டர் செய்துவிடுவார்கள் என்றும் தனக்கு சிலர் கூறியதாகவும் தெரிவித்தார்.

ஆகவே காவல்துறையினர் பிடியில் சிக்காமல் இருக்கவே தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்திருந்ததாகும், ராஜஸ்தான் காவல் நிலையத்தில் சரணடைய இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும்,  மத்திய அரசு என் குரலை ஒடுக்க பார்க்கிறது, பொய்யான வழக்கில் எனக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை நியாயப்படுத்த முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் அவரை மருத்துவமனையில், காங். மூத்த தலைவர் அர்ஜூன் மவுத்வாடியா சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் பட்டேல் இன தலைவரான ஹர்தீக் பட்டேலும், பிரவீன் தொகாடியாவை சந்தித்து பேசினார்.