
மதுரையில் நடிகர் சூரியின் சகோதரர் மகள் திருமண விழாவில் 10 பவுன் கொள்ளைபோனது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
இந்த விழாவில் திரையுலக பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் மணமக்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என, ஏராளமானோர் பங்கேற்றனர்.
மணமகன் அறையில் இருந்த 5 பவுன் சங்கிலி, 3 பவுன் நெக்லஸ், 2 பவுன் பிரேஸ்லெட் என, 10 பவுன் நகைகள் திடீரென மாயமானது. இச்சம்பவம் தொடர்பாக சூரி சகோதரரின் மேலாளர் கோரிப்பாளையம் சூரியபிரகாஷ் என்பவர் கீரைத்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
திருமண மண்டபத்திலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் சேகரித்து விசாரிக்க திட்ட மிட்டுள்ளனர்.
[youtube-feed feed=1]