‘சூரரை போற்று’ தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 12ஆம் தேதி வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியான நிலையில் ஜூலை 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு காட்டுப்பயலே பாடலின் 1 நிமிட வீடியோ வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தொடர்ந்து இந்த பாடல் அடுத்த நாள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் ஆகாசம் , வெய்யோன் சில்லி பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்நிலையில் படத்திலிருந்து நாலு நிமிஷம் பாடல் வீடியோ வெளியானது. கிருஷ்ணராஜ் பாடிய இந்த பாடல் வரிகளை மாயா மஹாலிங்கம் எழுதியிருப்பார். மனைவியை தேடும் மாறாவாக தனது நடிப்பில் கச்சிதம் காட்டியிருப்பார் நடிகர் சூர்யா. சூர்யாவுக்கு நிகராக தனது நடிப்பில் பட்டையை கிளப்பியிருப்பர் பொம்மி எனும் பாத்திரத்தில் நடித்த அபர்ணா.