சென்னை

விரைவில் தமிழக ரேஷன் கடைகள் பணி நேரம் மாற்றி அமைக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் ரேஷன் கடைகள் வாயிலாக அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் சென்னை மற்றும் புறநகரில் காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையும் செயல்பட்டு வருகிறது. பிற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் செயல்பட்டு வருகின்றன.

ரேஷன் கடைகள் மதியம் மூடப்படும் நேரத்தை குறைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். விரைவில் ரேஷன் கடைகள் பணி நேரம் மாற்றம் மற்றும் விடுமுறை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

தற்போது மாதத்தில் முதல் 2 வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்பட்டு முதல் 2 ஞாயிற்றுக்கிழமைகள் பணிநாளாக செயல்பட்டு வருகிறது. ஆனால் ஒரே நாளில் சீராக விடுமுறை அளிக்க அரசு திட்டமிட்டு வருகிறது.  ரேஷன் கடை பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமையை விடுமுறை நாளாக அறிவிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே வார விடுமுறையும் சீக்கிரம் மாற்றப்பட உள்ளது.