டில்லி

விரைவில் வாட்ஸ்அப் செயலியில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சம் வர உள்ளது.

உலகில் பலநூறு கோடிக்கணக்கான மக்கள் தினசரி அத்தியாவசிய தேவையாகப் பயன்படுத்தி வரும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் அவ்வப்போது புதுப்புது அப்டேட்கள் வருவது வழக்கம். அவ்வரிசையில் ஸ்கைப், கூகுள் மீட், ஜூம் வீடியோ காலிங் ஆப்ஸ்களில்  உள்ளிட்ட செயலிகள் போல வாட்ஸ்அப் நிறுவனமும் விரைவில் ஸ்க்ரீன் ஷேரிங் அம்சத்தைக் கொண்டு வரவுள்ளது.

இந்த ஸ்க்ரீன் ஷேரிங் அம்சம் என்பது, ஒரே நேரத்தில் பலர் வீடியோ கான்பரன்ஸ் மூலம்  இணைக்கப்பட்டிருக்கும் போது, அதை நடத்தும் நபரோ அல்லது வேறு யாரோ தங்களது மொபைல் ஸ்கிரீனையோ அல்லது லேப்டாப் ஸ்கிரீனையோ அனைவருக்கும் தெரியும்படி ஷேர் செய்துகொள்ள முடியும்.

இந்த வசதி பெரும்பாலும் ஐடி துறை ஊழியர்களுக்கு கவும் அவசியமான ஒரு அம்சம் என்றே சொல்லலாம்.  இதற்கான முதல்கட்ட பணிகளை ஏற்கனவே தொடங்கி உள்ளது.

தற்போது , வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் இது சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  இத்தகைய அம்சம் வந்தால், வாட்ஸ்அப் பயன்படுத்தும் யார் வேண்டுமானாலும், வீடியோ கால் மூலம் தங்களது உறவினர்கள் அல்லது நண்பர்கள் உடன் பேசும்போது, அவர்களது போனின் ஸ்கிரீனை அனைவருக்கும் தெரியும்படி ஷேர் செய்துகொள்ள முடியும்.

அதைப்போல், வாட்ஸ்அப்பில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சம் வந்த உடன் நீங்கள் வீடியோ கால் செய்யும்போது, கீழே மைக், வீடியோ ஹைட், டிஸ்கனெக்ட் (Disconnect) ஆகிய டேப்களுக்கு இடையே ஸ்கிரீன் ஷேரிங் டேப் இடம்பெற்று இருக்கும்.  அதை கிளிக் செய்த உடன் உங்களது போனின் ஸ்கிரீன் அனைவருக்கும் தெரியும்படி டெலிகாஸ்ட் செய்யப்படும்.  பிறகு மீண்டும் அதே ஸ்கிரீன் ஷேரிங் டேப்பை கிளிக் செய்தால், உங்களது ஸ்கிரீன் அவர்களுக்குத் தெரியாது.