சென்னை

மிழகத்தில் மலேரியா ஒழிப்பு விரைவில் முழு அளவை எட்ட உள்ளது

தமிழகம் முழுவதுமே மலேரியா ஒழிப்பில் அனைத்து உள்ளாட்சி நிர்வாகங்களும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.  குறிப்பாக சென்னை மாநகராட்சியும் மற்ற நான்கு மாவட்டங்களும், மலேரியாவைத் தடுக்கும் வகையில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக தேசிய கட்டமைப்பை ஏற்று, 2030 ஆம் ஆண்டிற்குள் மலேரியாவை ஒழிக்க வேண்டும் என தமிழகம் செயல்பட்டு வருகிறது என்று சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.  பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகத்தின் தரவுகள், 2020 முதல் ஆகஸ்ட் 2024 வரை இந்த நோயினால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பதைக் காட்டுகிறது.

நடப்பாண்டான 2024 ஆம் ஆண்டில் மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட பாதிப்பு இல்லை.  எனவே மலேரியாவை முற்றிலுமாக நீக்குவதற்கு தமிழகம் நெருக்கமாக உள்ளது. மேலும் 2023 இல் ஒரு சிறிய உயர்வைத் தவிர, மாநிலத்தில் ஒரு வருடத்திற்குல் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.