டில்லி

ந்தியாவில் நான்காம் கொரோனா தடுப்பூசியாக மாடர்னா நிறுவன மருந்துக்கு  சிப்லா நிறுவனம் விண்ணப்பித்ததை ஏற்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 3 கொரோனா தடுப்பூசி மருந்துகளுக்கு அவசர பயன்பாட்டு அனுமதி கிடைத்துள்ளது.  அவை ஆக்ஸ்ஃபோர்ட் – ஆஸ்டிரா ஜெனிகாவின் கோவிஷீல்ட், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின்,  ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி ஆகியவை ஆகும்.   தற்போது கொரோனா தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதையொட்டி நான்காம் தடுப்பூசியாக மாடர்னா நிறுவன தடுப்பூசிக்கு  இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.   இந்த மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்த அனுமதி அளித்த பிறகு முதலில் 100 பேருக்கு போடப்பட்டு அவர்களை கண்காணிக்கப்படுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது

மும்பையைச் சேர்ந்த சிப்லா என்னும் மருந்து நிறுவனம் இந்த தடுப்பூசி மருந்தை மாடர்னா நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதி கோரி உள்ளது.   ஏற்கனவே இந்த மருந்துக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.

எனவே இந்த ஒப்புதலின் அடிப்படையில் இந்தியாவில் அவசரக் கால பயன்பாட்டு அனுமதி அளிக்குமாறு சிப்லா நிறுவனம் மத்திய அரசுக்கு விண்ணப்பித்துள்ளது.   இந்த மருந்துக்கு அனுமதி அனுமதி அளித்துள்ளதாக தற்போது நிதி அயோக் சுகாதாரத்துறை உறுப்பினர் வி கே பால் அறிவித்துள்ளார்.