சென்னை
விரைவ்ல் சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் 16 பெட்டிக்ளுடன் இயக்கப்பட உள்ளது.
தற்போது நாடு முழுவதும் உள்ள பல்வேறு முக்கிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னை எழும்பூா்- நெல்லை ‘வந்தே பாரத்’ ரெயியிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது . நெல்லையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அதே நாள் மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது.
மறு மார்க்கமாக, எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு அதே நாள் இரவு 10.40 மணிக்கு நெல்லையை அடையும் இந்த ரயிலில் 7 ஏசி சேர் கார் பெட்டிகளும், ஒரு எக்ஸிகியூட்டிவ் சேர்கார் பெட்டியும் என மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன பயணிகள் கூட்டம் அதிகமாகி வருவதால் சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயிலை 16 பெட்டிகளைக் கொண்டு இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
தெற்க ரயில்வே போக்குவரத்து பிரிவு, அனுப்பிய சுற்றறிக்கையில்,
”சென்னை எழும்பூா்-நெல்லை இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ விரைவு ரயிலில் (எண் 20665/20666) அதிக அளவில் பயணிகள் பயணம் செய்வதால், 16 பெட்டிகளைக் கொண்டு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப நெல்லை பணிமனையில் பராமரிப்பு நடவடிக்கையை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.