கண்ணுக்குள் வைக்கும் கான்டாக்ட் லென்ஸில் கேமராவை இணைத்து வீடியோக்களை பதிவு செய்யும் புதிய தொழில்நுட்பத்துக்கான பேட்டண்ட் உரிமைக்காக சோனி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
lense_cam
கண்களை இமைப்பதன் மூலம் இந்தக் கேமராவை இயக்க முடியும், நாம் சாதாரணமாக கண் இமைக்கும் நேர அளவு 0.2 முதல் 0.4 விநாடிகளாகும். ஆனால் அசாதரணமான வகையில் 0.5 வினாடிகள் கண்களை இமைக்கும்போது இந்தக் கேமரா அதை தனக்கான கட்டளையாக எடுத்து செயல்படத்துவங்கும்.
இதே தொழில்நுட்பத்தை கூகுள் மற்றும் சாம்சங் நிறுவனங்களும் ஏற்கனவே உருவாக்கி அவையும் இந்த தொழில்நுட்பத்துக்கு பேட்டண்ட் உரிமை கோருகின்றன.

lense_cam2

சாம்சங் சோனி இரு நிறுவனங்களில் படைப்புகளும் ஒன்றுபோல தோன்றினாலும் அவை ஃபைல்களை சேமிக்கும் தொழில்நுட்பத்தில் வேறுபடுகின்றன. சாம்சங் லென்ஸ் எடுக்கும் வீடியோக்கள் மொபைல் போன்களுக்கு அனுப்பப்பட்டு அவை அங்கு சேமிக்கப்படும். ஆனால் சோனியின் தயாரிப்போ எடுக்கும் வீடியோக்களை அந்த லென்சுக்குள்ளேயே சேமிக்கும் வசதியுடன் கூடியதாகும். இதன்மூலம் அந்த வீடியோக்களை எளிதாக ஆக்ஸஸ் செய்ய இயலும்.
இந்த டெக்னாலஜியுடன் கூடிய லென்சுகள் சந்தைக்கு வரும் பட்சத்தில் அதன் மூலம் நல்ல பயன்பாடுகள் இருந்தாலும் அது அடுத்தவரின் அந்தரங்கத்தை பாதிக்கும் வகையில் பயன்படுத்தப்பட அதிகம் வாய்ப்பிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.