தீவிரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் உயிர்நீத்தது அறிந்து அதிர்ச்சியடைந்தேன்: சோனியா காந்தி உருக்கம்

Must read

புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் உயிர்நீத்த சம்பவம், தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.


அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது தீவிரவாதிகள் நடத்தியுள்ள கோழைத்தனமான தாக்குதல் கோபத்தையும் ஆழ்ந்த துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அவர்களது உயிர் தியாகம் என்றும் நினைவில் நிற்கும். உயிர்த் தியாகம் செய்த ஒவ்வொரு வீரர்களும் இதயத்தில் நிறைந்துவிட்டனர்.
எனது துக்கத்தையும் வலியையும் பகிர்ந்து கொள்கிறேன்.

தனி மனித கோட்பாட்டுக்கு விரோதமாக செயல்பட்டு இத்தகைய கொடூரத் தாக்குதலை நடத்தியவர்களை சட்டப்படி தண்டிக்கவேண்டும்.

இவ்வாறு சோனியா காந்தி கூறியுள்ளார்.

 

More articles

Latest article