டெல்லி: இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் 105வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இந்திரா காந்தி சமாதியில் மரியாதை செலுத்தி வருகின்றனர். பாதயாத்திரையின்போது, ராகுல்காந்தி இந்திராகாந்தியின் புகைப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்.

இந்திய ஒற்றுமை பயணத்தின்போது , மகாராஷ்டிராவில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் உருவப்படத்திற்கு அதே போல காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள சக்தி ஸ்தாலில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மன்றும்  காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். மல்லிகார்ஜுன கார்கே மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அஞ்சலி செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து, டெல்லியில் நடைபெற்ற  75 ஆண்டு சுதந்தின தினத்தை மையமாக வைத்து ‘ஒற்றுமையின் ஆவி’ என்ற புகைப்பட சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, அங்கு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு ராகுல்காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.