காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜஸ்தானில் இருந்து ராஜ்ய சபா வேட்பாளராக சோனியா காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாக உள்ளதை அடுத்து அந்த இடத்திற்கு சோனியா காந்தி போட்டியிடவுள்ளார்.
இவர் தவிர, பீகாரில் டாக்டர் அகிலேஷ் சிங் பிரசாத், ஹிமாச்சல் பிரதேசத்தில் இருந்து அபிஷேக் மனு சிங்வி மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து சந்திரகாந்த் ஹண்டோரே ஆகியோர் ராஜ்ய சபாவுக்கு போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கட்சியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்ய சோனியா காந்தி ஜெய்ப்பூர் சென்றுள்ளார்.