டில்லி
நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடருக்காகக் காங்கிரஸ் கட்சி சார்பில் குழுக்கள் அமைத்து கட்சி தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்களில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி தற்போது நிலவி வரும் பல பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளன. இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு எடுக்க வகையாகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இரு குழுக்களை நியமித்துள்ளார். அதற்கான உத்தரவை அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த உத்தரவில்
“காங்கிரஸ் தலைவர் என்னும் முறையில் நான் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள குழுக்களை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளேன். இரு அவைகளில் நடைபெற உள்ள கூட்டத் தொடர்களில் பணிகளை சரியாக செய்யவும் இது குறித்த முடிவுகளை எடுக்கவும் கீழே கண்டுள்ளோரை நியமித்து உத்தரவிட்டுள்ளேன்
மக்களவை
- ஆதிர் ரஞ்சன் சவுத்ரி – தலைவர்
- ஸ்ரீ கௌரவ் கோகாய் – துணை தலைவர்
- கே சுரேஷ் – தலைமை கொறடா
- மனிஷ் திவாரி
- சஷி தரூர்
- ரன்வீத் சிங் பிது – கொறடா
- மாணிக்கம் தாகுர் – கொறடா
மாநிலங்களவை
- மல்லிகார்ஜுன கார்கே – தலைவர்
- ஆனந்த சர்மா – துணைத் தலைவர்
- ஜெயராம் ரமேஷ் – தலைமை கொறடா
- அ,ம்பிகா சோனி
- ப சிதம்பரம்
- திக்விஜய சிங்
- கே சி வேணுகோபால்
இவர்கள் தங்கள் குழுக்களுக்குள் கூட்டத் தொடரில் நடந்து கொள்வது குறித்து ஒருவருக்கொருவர் விவாதித்து அவற்றைக் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கு தெரிவித்து வழி நடத்துவார்கள்”
என அறிவிக்கப்பட்டுள்ளது.