டில்லி

ன்று 18 எதிர்க்கட்சி தலைவர்களுடன் சோனியா காந்தி பெகாசஸ், விவசாயிகள் பிரச்சினை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடரில் பெகாசஸ் ஒட்டுக கேட்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பு எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டன.  இரு அவைகளும் இதனால்  முடங்கிப் போயின.   மத்திய அரசால் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளை மீறி ஒன்றும் செய்ய முடியவில்லை.

மத்திய அரசு பெகாசஸ் விவகாரத்தில் விவாதத்தை அனுமதிக்காததால் இந்த அமளிகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.   எதிர்க்கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் சிற்றுண்டி விருந்து அளித்து ஆலோசனை நடத்தினார்.  இதையொட்டி இன்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி 18 எதிர்க்கட்சி தலைவர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட் கட்சிகள் விவரம் வருமாறு

1.       இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி

2.       திருணாமுல் காங்கிரஸ்

3.       தேசிய வாத காங்கிரஸ்

4.       திமுக

5.       சிவசேனா

6.       ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா

7.       இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

8.       மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

9.      தேசிய மாநாட்டுக் கட்சி

10.    ராஷ்டிரிய ஜனதா தளம்

11.    அகில இந்திய ஐக்கிய ஜனநாயக கட்சி

12.    விடுதலை சிறுத்தைகள் கட்சி

13.    லோக்தந்திரிக் ஜனதா தளம்

14.    மதச்சார்பற்ற ஜனதா தளம்

15.    ராஷ்டிரியா லோக் தளம்

16.    ராஷ்டிரிய சமாஜ்வாதி கட்சி

17.    கேரள மணி காங்கிரஸ்

18.    இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

ஆகியவை ஆகும்.

10 மாதங்களுக்கு மேலாக நடந்துவரும் விவசாயிகள் போராட்டம், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுதல், 3ஆம் கொரோனா அலையைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்துதல், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதைக் கைவிடுதல், நாட்டின் பொருளாதார நிலைமை, அதிகரித்துவரும் வேலையின்மை, கொரோனா பெருந்தொற்றால் வேலையிழந்த மக்களுக்கு நிதியுதவி வழங்குவது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.