டில்லி:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறை காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிம்லா சென்றார். இந்நிலையில் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் டில்லிக்கு அழைத்துவரப்பட்டு ஸ்ரீகங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வயிறு வலி காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.