டில்லி

ரு பெண் விவசாயியிடம்  ராகுல் காந்திக்கு பெண் பார்க்குமாறு சோனியா காந்தி கூறி உள்ளார்.

அரியானாவைச் சேர்ந்த பெண் விவசாயிகள் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை  சந்தித்து உரையாடினர்.

ராகுல் காந்திக்குத் திருமணம் செய்து வையுங்கள் என்று அப்போது சோனியா காந்தியிடம் பெண் விவசாயி ஒருவர் கூறி உள்ளார்.

அதை கேட்ட சோனியா காந்தி நகைச்சுவையாக ‘நீங்களே பெண் பாருங்கள்” என்று கூறி உள்ளார்.

சோனியா கூறியதைக் கேட்டு மற்ற பெண் விவசாயிகள் சிரிக்கத் தொடங்கினர்.

இது குறித்த வீடியோவை ராகுல்காந்தி தனது டிவிட்டரில் பகிர்ந்து உள்ளார்.

இதோ அந்த வீடியோ