டில்லி:

17வது மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவித்துள்ளார். அதன்படி நாடு முழுவதும்  7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடும் அமேதி தொகுதி மற்றும்  முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதிகளில் 5வது கட்ட தேர்தல் நடைபெற உள்ள  மே6ந்தேதி  வாக்குப்பதிவு  நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்படும் உ.பி. மாநிலம் மற்றும், மேற்கு வங்க மாநிலங்களில்  தேர்தல் நடைபெறும் தேதிகள் மற்றும் தொகுதிகள் விவரங்கள் தெரிய வந்துள்ளது.

மேற்கு வங்கம்

அதன்படி மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 பாராளுமன்ற தொகுதிகளிலும் 7 கட்டங்களாக தேர்தல்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி,  ஏப்ரல் – 11ந்தேதி  2 தொகுதிகளும் (Alipurduar, Cooch Behar), எப்ரல் 18ந்தேதி 3 தொகுதிகளுக்கும் (Darjeeling, Raiganj, Jalpaiguri),  ஏப்ரல் 23ந்தேதி 5 தொகுதிகளுக்கும் (Balurghat, Jangipur, Murshidabad, Maldah Uttar, Maldah Dakshin) ,  ஏப்ரல் 29ந்தேதி 8 தொகுதிகளுக்கும் (Krishnanagar, Asansol, Bolpur, Berhampore, Ranaghat, Purba Bardhaman, Bardhaman-Durgapur, Birbhum),  மே 6ந்தேதி 7 தொகுதிகளுக்கும் ( Bongaon, Barrackpore, Sreerampore, Hooghly, Howrah, Uluberia, Arambag),  மே 12ந்தேதி 8 தொகுதிகளுக்கும் ( Tamluk, Kanthi, Ghatal, Jhargram, Bishnupur, Bankura, Medinipur, Purulia ),  மே 19ந்தேதி 9 தொகுதிகளுக்கும் (Dumdum, Mathurapur, Jadavpur, Kolkata South, Kolkata North, Barasat, Diamond Harbour, Basirhat, Jaynagar) நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

உத்தரபிரதேசம்

நாட்டிலேயே அதிமான லோக்சபா தொகுதிகளுடைய உத்தரபிரதேச மாநிலத்திலும் 8 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில், எத்தனை தொகுதிகள் எந்தெந்த தேதிகளில் நடைபெற உள்ளது என்பது குறித்த பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.

ஏப்ரல் 11ந்தேதி நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் 8 தொகுதிகளிலும்,  ஏப்ரல் 18ந்தேதி நடைபெற உள்ள 2வது கட்ட தேர்தலின்போது  8 தொகுதிகளிலும்,  ஏப்ரல் 23ந்தேதி நடைபெறும் 3வது கட்ட தேர்தலின்போது  10 தொகுதிகளிலும், 4வது கட்ட தேர்தல் நடைபெறும்  ஏப்ரல் 29ந்தேதி அன்று 13 தொகுதிகளிலும்,  மே 6ந்தேதி நடைபெறும் 5வது கட்ட தேர்தலின்போது  14 தொகுதிகளுக்கும், 6வது கட்ட தேர்தல் நடைபெறும்  மே 12ந்தேதி அன்று 14  தொகுதிகளிலும், 7வது கட்டமான இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறும்  மே 19ந்தேதி அன்று 13 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடும் அமேதி தொகுதி மற்றும்  முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி போட்டியிடும் ரேபரேலி  தொகுதிகளில் 5வது கட்ட தேர்தல் நடைபெற உள்ள  மே6ந்தேதி  வாக்குப்பதிவு  நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.