பசும்பொன்: மருத்துவ படிப்பில்  அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவாகரத்தில் சிலர் செய்யும் அரசியல் எடுபடாது என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி குருபூஜையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஊரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  துணை முதல்வர் ஓபிஎஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும்  அதிமுக அமைச்சர்கள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  முதல்வர் பழனிசாமி,  முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் பல்வேறு வசதிகளை அதிமுக அரசு ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது.  மீனவர்களுக்காக பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு அறிவித்து நிறைவேற்றி உள்ளது.

‘நீட் தேர்வு காரணமாக தமிழக அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவாகிப் போனது. இதன் காரணமாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சட்ட மசோதா தமிழக சட்டமன்ற்ததில்  நிறைவேற்றப்பட்டு பல நாட்கள் ஆகியும், இன்னும் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் இந்த ஆண்டு உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இதன் காரணமாக, 7.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது . ஆளுநர் தாமதிப்பதால்  அரசு அரசாணை வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டது,  உள் ஒதுக்கீட்டை இந்த ஆண்டே செயல்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், 7.5 சதவீத மருத்துவ உள்ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் சிலர் செய்யும் அரசியல் எடுபடாது.

இவ்வாறு அவர் கூறினார்.