ஸ்டாலின் குறித்து சில நாளிதழ்கள் விஷமத்தனம்: திமுக கண்டனம்

Must read

சென்னை,

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து, முரசொலியில் செய்தி வந்ததாக,  சில நாளேடுகள்  விஷமத்தனமாக பொய்ச்செய்தி வெளியிடுவதாக திமுக கழக அமைப்பு செயலாளர் ஆலந்தூர் பாரதி கண்டனம் தெரிவித்து மறுப்பு அறிக்கை வெளியிட்டு  உள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

கழகத்தின் எழுச்சியையும், கழக செயல் தலைவர் ஸ்டாலின் அபரிதமான வளர்ச்சி யின்மீதுழ காழ்ப்புணர்ச்சி கொண்ட சில நாளேடுகள் வேண்டுமென்றே விஷமத்தன மான பொய்ச்செய்தியை வெளியிட்டு உள்ளன.

குறிப்பிக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  பெயருக்கு பதிலாக இனி ‘கழகச் செயல் தலைவர்’ என்றே குறிப்பிட வேண்டும் என்றும், ஸ்டாலின் என்ற பெயர் இடம்பெறக்கூடாது என கழக நாளேடான முரசொலியில் வெளியிடாத ஒரு செய்தியை வெளியிட்டதாக சில நாளி தழ்க்ள் விஷமத்தனமான பொய்ச் செய்தி யினை வேண்டுமென்றே வெளியிட்டு உள்ளன.

இதனை திமுக தலைமைக்கழகம் வன்மை யாக கண்டிப்பதோடு, இதுபோன்ற செய்தியையோ, சுற்றறிக்கையையோ திமுகவோ, முரசொலியோ வெளியிட வில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More articles

Latest article