சென்னை: சசிகலா சென்னை வர அதிமுக கொடியுடன் கார் கொடுத்து உதவிய அதிமுக நிர்வாகிகளை, எட்டப்பன்கள் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

பெங்களூருவில் இருந்து புறப்பட்ட அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் வந்த நிலையில், தமிழக எல்லைப்பகுதியில், காரில் இருந்த கொடியை அகற்றிவிட்டு, அதிமுக பொருத்தப்பட்ட மற்றொரு காரில் ஏறி பயணமாகி வருகிறார்.

சசிகலா பயணித்து வரும் கார் அதிமுக நிர்வாகிக்கு சொந்தமானது என்பதால், அவரது காரில் இருந்து கொடியை அகற்ற முடியவில்லை. இதனால், அதிமுகஅரசு விழிபிதுங்கி நிற்கிறது.

இந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் சசிகலா பயணம் குறித்து பல்வேறு கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் தெரிவித்த அமைச்சர், அதிமுகவில் ஸ்லீப்பர் செல்கள் யாரும் கிடையாது, ஆனால் எட்டப்பன்கள் இருக்கத்தான் செய்கின்றனர் என்பது, இன்று தெரிய வந்துள்ள என காட்டமாக விமர்சித்தார்.

மேலும், சசிகலாவை அதிமுகவில் சேர்க்கவோ,  அதிமுக, அமமுக இணையவோ 100சதவிகிதம் வாய்ப்பு இல்லை என்று கூறியவர், ஸ்டாலின் கூறுவதைப் பார்க்கும்போது, சசிகலா திமுக இடையே உடன்பாடு இருக்கிறது என்பது தெரிய வருகிறது என்று கூறினார்.

சசிகலா சென்னைக்கு பயணம் செய்வது யாருடைய காரில்….? பரபரப்பு தகவல்கள்…