சென்னை: சிறை தண்டனை முடிந்து விடுதலையான சசிகலா இன்று காலை பெங்களூருவில் இருந்து  காரில் அதிமுக கொடியுடன் பயணித்து வரும் நிலையில், அவருக்கு கார் கொடுத்து உதவிய அதிமுக நிர்வாகி யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. சசிகலாவுக்கு அதிமுகவினரே உதவி வருவது அதிமுக தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து, கடந்த மாதம் 27-ந்தேதி சசிகலா விடுதலை ஆன சசசிகலா இன்று (8ந்தேதி) சென்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறார். இன்று மாலை அவர் சென்னை வருவார்எ ன எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு அமமுகவினர் மட்டுமின்றி அதிமுகவிரும் போஸ்டர்கள், பேனர்கள் வைத்து வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

முன்னதாக, பெங்களூருவில் இருந்து புறப்பட்ட சசிகலா காரில் அதிமுக கொடி பறந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏற்கனவே சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என காவல்துறையில் அதிமுக அமைச்சர்கள் புகார் கொடுத்துள்ளதால், அவரது கட்சியில் இருந்து அதிமுக கொடி அகற்றப்படும் என காவல்துறையும் எச்சரிக்கை செய்தது.

இந்த நிலையில் ஓசூர் ஜூஜூவாடி அருகில் அதிமுக கொடியுடன் வந்த நிலையில், தமிழக எல்லையில்  காரில் இருந்த கொடியை எடுத்துவிட்டு, அதிமுக கொடி பொருத்தப்பட்ட மற்றொரு வாகனத்தில் பயணமாகி வருகிறார்.

அதிமுக கொடியுடனான காரை சசிகலாவை அழைத்து வரவிழங்கியது, அதிமுகவைச் சேர்ந்த சூளகிரி ஒன்றியச் செயலாளர் சம்பங்கி என்பவருடைய துஎன்று தகவல் வெளியாகி உள்ளது.  அதிமுக நிர்வாகியான சூளுகிரி சம்பங்கி, சசிகலாவுக்கு  சூளகிரியில் பகுதியில் பிரமாண்டமான வரவேற்பு கொடுத்தார். அவரது காரில்தான் சசிகலா சென்னை வந்துகொண்டிருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியானது. அதன் காரணமாக சசிகலாவின் வாகனத்தில் இருந்து அதிமுக கொடியை அகற்ற முடியாத நிலை ஆளுங்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சசிகலா பயணித்து வரும் கார், சென்னை மாதவரத்தைச் சேர்ந்த அதிமுக நபருக்கு சொந்தமானது என்ற தகவலும் பரவி வருகிறது.  வடசென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. இவர் சசிகலாவின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. ஆனால், தற்போதும் அதிமுகவில் நீடித்து வரும் தட்சிணாமூர்த்தி,  அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் மாதவரம் மூர்த்திக்கு நெருக்கமானவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக  நிர்வாகி ஒருவரின் அதிமுக கொடி பொருத்தப்பட்ட  காரில் சசிகலா பயணமாகி வருவதால்,  சசிகலாவின் காரில் இருந்து அதிமுக கொடியை அகற்ற முடியாத தர்மச்சங்கடமான நிலைக்கு காவல்துறையினர் தள்ளப்பட்டு உள்ளனர்.  சசிகலாவுக்கு கார் கொடுத்து உதவிய கறுப்பு ஆடு யார் என்று தேடி வரும் அதிமுக தலைமை, அவர்களை கட்சியில் இருந்து நீக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகலாவுக்கு அளிக்கப்படும் பிரமாண்டமான வரவேற்பு, கார் வசதி போன்ற அதிரடி நடவடிக்கைகள், அதிமுக தலைமை எதிர்பார்க்காத நிலையில், சசிகலாவின் முதல்நாள் நடவடிக்கையே அதிமுக தலைவர்களுக்கு தூக்கத்தை கெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன…