நோய் தொற்று ஆபத்து என்று நன்கு தெரிந்திருந்தும் மருத்துவத் துறையினர் தூய்மைப் பணியாளர்கள் காவல்துறையினர், இவர்களுக்கு பல்வேறு ஏற்பாடுகளை செய்து தரும் வருவாய்த்துறையினர் என ஏகப்பட்ட தரப்பினர் வெளியே உலவிக் கொண்டுதான் இருக்க வேண்டியுள்ளது
அவ்வளவு ஏன் வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை ஏற்றி வருவதற்காக விமானங்களில் செல்லும் ஊழியர்கள் கூட ரிஸ்க் எடுத்துதான் பணியாற்றுகின்றனர்.
இதேபோலத்தான் பொது முடக்கத்தால் அவதிப்படுபவர்களுக்கு உதவுவதற்காக பல்வேறு தரப்பினர் களத்தில் இறங்குகின்றனர்.
டி நகர் எம்எல்ஏ ஜெ. அன்பழகன் என்னவோ கிரிக்கெட் விளையாடிக் கொண்டும், 10 பெண்களை கூட்டி கொண்டு கேபரே டான்ஸ் ஆடி அதனால் நோய் தொற்று வந்து சேர்த்தது போல் அவருக்கு எதிராக கடித்துக் குதறிக் கொண்டிருக்கின்றனர்..
நோய் தொற்று பற்றி மறைந்த ஜெ. அன்பழகன் அவ்வளவு விலாவாரியாக பேசிய பேட்டிகள் எல்லாம் உண்டு..
பொதுவெளியில் அவ்வளவாக நடமாடாத பிரிட்டன் பிரதமர் உட்பட பல்வேறு உலக தலைவர்களையும் இந்த கொரோனா ஆட்டித்தான் படைத்திருக்கிறது.. அதற்கெல்லாம் எங்கே போய் முட்டிக் கொள்வது?
இந்த உலகத்தில் கடைசிவரை தவிர்க்க முடியும் என 100% உத்தரவாதம் தர முடியாத ஒரே விஷயம் மரணம்..
மற்ற உயிர்களை காப்பாற்ற, மற்றவர்களின் பசியை போக்க, தன் குடும்பத்தை காப்பாற்ற என பல்வேறு தரப்பினர் வெளியே அலைய வேண்டிய தான் உள்ளது..
வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பவர்கள் அத்தனை பேரும் புத்திசாலிகள் என்றால், வீட்டைவிட்டு வெளியே வந்து உலவும் அத்தனை பேரும் அறிவு கெட்டவர்களா?
எல்லாவற்றிலும் அரசியல்….
நம்மைப் பொருத்தவரை, ராயல் சல்யூட் டூ ஜெ.அன்பழகன்
– ஏழுமலை வெங்கடேசன்