டில்லி,

த்திய அரசின் துணை தலைமை வழக்கறிஞர் (சொலிசிட்டர் ஜெனரல்) ரஞ்சித்குமார் திடீர் என தனது பொறுப்பில் இருந்த ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது..

மத்திய அரசின் சட்ட அலுவலகத்தில் அட்டர்னி ஜெனரலுக்கு அடுத்த பொறுப்பில் சொலிசிட்டர் ஜெனரல் எனப்படும் துணை தலைமை வழக்கறிஞர். இந்த பதவியில் மூத்த வழக்கறிஞர்  ரஞ்சித்குமார் பணியாற்றி வந்தர். அவர் இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் 11ந்தேதி அட்டர்னி ஜெனரலாக இருந்த முகுல் ரோத்தகி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், தற்போது ரஞ்சித்குமார் ராஜினாமா செய்திருப்பது டில்லி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசின் துணை தலைமை வழக்கறிஞராக 2014ம் ஆண்டு ஜூன் 7ந்தேதி நியமனம் செய்யப்பட்டார். அவரது பதவி காலம் கடந்த ஜூன் மாதத்துட முடிவடைந்தது. ஆனாலும், அவரது பதவிகாலம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், ரஞ்சித்குமார் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை மத்திய சட்டத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

தனது  தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாகவும், தனது குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க விரும்புவதாகவும் அந்த கடிதத்தில் ரஞ்சித்குமார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த பதவிக்கு துணை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.