அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்திலிருந்து புறப்பட்ட சூரிய சக்தியால் இயங்கும் விமானம் பென்சில்வேனியாவில் வெற்றிகரமாகத் தரை இறக்கப்பட்டது.
புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதன் ஒரு பகுதியாக சூரிய மின்சக்தி பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக சூரிய சக்தியால் உலகைச் சுற்றும் விமானம் பறக்கவிடப்பட்டது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் அபுதாபியிலிருந்து இந்த விமானம் தனது பயணத்தை துவங்கியது. ஒவ்வொரு நாடாக இந்த விமானம் சென்று வருகிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணத்தின் ஒரு பகுதியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தின் டேய்ட்டன் விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறங்கியது.
அதன் பின் அங்கிருந்து புறப்பட்ட விமானம் தற்போது பென்சில்வேனியாவின் லீஹை பள்ளத்தாக்கில் தரையிறங்கியது.
இந்த விமானம் புறப்பட்டதிலிருந்து இதுவரை முழுக்க முழுக்க சூரிய சக்தியால் மட்டுமே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.