பணம், புகழ் எல்லாம் செல்லாக்காசு!: "ஆப்பிள்" ஸ்டீவ் ஜாப் இறுதி வார்த்தைகள்

Must read

ப்பிள்   கனிணி  நிறுவனத்தின் கோடீசுவர உரிமையாளர்  ஸ்டீவ் ஜாப்,  மரணப்படுக்கையில் சொன்ன இறுதி வரிகள்  இவை. படித்துப்பாருங்கள். வாழ்க்கையை உணரவைக்கும் வரிகள் இவை:
“ பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை இறுதியில் தான் அறிந்து கொண்டேன்.
இதோ இந்த மரணத்தருவாயில், நோய் படுக்கையில் படுத்து கொண்டு என் முழு
வாழ்க்கையையும் திரும்பி பார்க்கும் இந்த தருணத்தில் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த அங்கீகாரங்கள், பணம் , புகழ் எல்லாம் செல்லா காசாக, அர்தமற்றதாக மரணத்தின் முன் தோற்று போய் நிற்பதை உணர்கிறேன்.
வாழ்க்கையில் நாம் வாழ்வதற்கு  போதுமான பணம் சம்பாரித்த பின், ணத்திற்கு
சம்மந்தமில்லாத விஷயங்களையும் சம்பாரிக்க தொடங்க வேண்டும் என்பது இப்போது புரிகிறது.  அது  உறவாகவோ, இல்லை எதாவது கலை வடிவமாகமாவோ , நம் இளமையின் கனவாகவோ இருக்கலாம். அது தான் வாழ்வில் மிக முக்கியமானது.
அதைவிட்டு பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு ஓடும் மனிதனின் வாழ்க்கை முற்றிலும் வேறு திசையில் திரும்பிவிடுகிறது என் வாழ்க்கையை போல.
கடவுள் நம் புலன்களின் மூலம்  அனைவரின் மனதில் இருக்கும் அன்பை உணரசெய்யும் சக்தியை  கொடுத்திருக்கிறார், பணத்தால் நாம் உண்டாக்கியிருக்கும் எல்லா சந்தோசங்களும் வெறும் பிரமைகள் தான்.
நான் சம்பாரித்த பணம் எதையும் இங்கு கொண்டுவர முடியாது.  நான் மகிழ்ந்திருந்த என் நினைவுகள் மட்டுமே இப்போது என்னுடன் இருக்கிறது.
steve-jobs-photo-iPad-unveiling-20-sized
அன்பும் காதலும் பல மைல்கள் உங்களுடன் பயணிக்கும்.
வாழ்க்கைக்கு எந்த எல்லைகளுமில்லை. எங்கு  செல்ல ஆசைப்படுகிறீர்களோ அங்கு செல்லுங்கள்.  தொட நினைக்கும் உயரத்தை தொட முயற்சியுங்கள்.
நீங்கள் வெற்றியடைவது உங்கள் எண்ணத்திலும் கைகளிலும் தான் உள்ளது.
உங்கள் பணத்தை வைத்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம்,
ஆனால் அந்த பணத்தின் மூலம் உங்கள் வலியை, உங்கள் துயரை யாரும்
வாங்கிகொள்ளுமாறு செய்ய முடியாது.
பணத்தின் மூலம் வாங்கும் பொருட்கள் தொலைந்துவிட்டால் மீண்டும்
வாங்கிவிடலாம். ஆனால் நீங்கள் தொலைத்து அதை பணத்தால்
வாங்க முடியாது என்ற ஒன்று  உண்டென்றால் அது உங்கள் வாழ்க்கை தான்.
வாழ்க்கையில் எந்த கட்டத்தில் நீங்கள் இருந்தாலும் பரவாயில்லை , இப்போது
வாழ்க்கையை வாழ ஆரம்பியுங்கள்.  நாம் நடித்து
கொண்டிருக்கும் வாழ்க்கை எனும் நாடகத்தின் திரை எப்போது வேண்டுமானாலும் இறக்கப்படலாம் என்பதை  நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் குடும்பத்தினருக்கு, மனைவிக்கு, நண்பர்களுக்கு, அன்பை வாரி வழங்குங்கள்.
உங்களை நீங்கள் சந்தோசமாக வைத்து கொள்ளுங்கள்.  அனைவரையும் மனமார
நேசியுங்கள்.!”

More articles

2 COMMENTS

Latest article