இணையதள முகவரிகள் (Internet Domain Name System) உருவாக்குவதை கட்டுப்படுத்தி வரும் சர்வதேச பெயர் மற்றும் எண்கள் ஒதுக்கீட்டு அமைப்பு (ICANN) ஆங்கிலம் தவிர பல்வேறு சர்வதேச மொழிகளில் இணையதள முகவரிகளை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.

அதில், தமிழ் உட்பட 22 இந்திய மொழிகளில் இணைய முகவரிகளை உருவாக்க வசதி செய்துள்ளது.

இருந்தபோதும், இந்த எழுத்துருக்கள் யுனிகோடில் இல்லாமல் ASCII எனப்படும் அமெரிக்க தர குறியீட்டை மட்டுமே பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறது.

இதனால், சர்வதேச மொழிகளில் இணையதள முகவரிகளை உருவாக்க அங்கீகாரம் கிடைத்தும் பயனில்லாமல் இருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள எட்டு கோடி தமிழர்களின் வசதிக்கும் முன்னேற்றத்திற்கும் மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களின் நலன் கருதி .tn என்ற டொமைனை தமிழ்நாடு அரசு வாங்கவேண்டும் என்று மென்பொருள் வல்லுநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.