டோக்யோ

ஜப்பான் நாட்டின் புகழ்பெற்ற சாஃப்ட் வங்கி ஸ்விக்கி நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளது.

ஜப்பான் நாட்டின் புகழ்பெற்ற வங்கியான சஃப்ட் வங்கி உலகெங்கும் பல நாடுகளில் முதலீடு செய்து வருகிறது. இந்த வங்கி முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு உலக அளவில் முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்து. இந்த நிறுவனம் இந்தியாவில் ஃபர்ஸ்ட் சிடி, ஓலா, ஓயோ உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. சமீபத்தில் தென் கொரியாவிலும் முதலீடு செய்ய உத்தேசித்துள்ளது.

இந்தியாவின் புகழ்பெற்ற உணவு வழங்கும் நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஸொமோட்டோ ஆகிய இரு நிறுவனங்களும் சாஃப்ட் வங்கியின் முதலீட்டை பெற ஆர்வ்வம் காட்டின. தற்போதுள்ள நிலையில் இரு நிறுவனங்களுமே வெளிநாட்டு முதலீட்டு தேவையில் உள்ளன. சாஃப்ட் வங்கியின் முதலீட்டை பெறுவதன் மூலம் பல்வேறு வெளிநாட்டு முதலீடுகளும் கிடைக்கும் என்பதால் இரு நிறுவனங்களும் போட்டியிட்டு வருகின்றன.

இந்த இரு நிறுவனங்களில் ஸ்விக்கி நிறுவனத்துக்கு ஏற்கனவே ரஷ்யாவின் டிஎஸ்டி குளோபல், தென் ஆப்ரிக்காவின் நஸ்பார்ஸ், அச்சல், மற்றும் நார்வீட் ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இவைகளில் நஸ்பார்ஸ் சமீபத்தில் 1 பில்லியன் டால்ர் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் சாஃப்ட் வங்கியும் தனது முதலீட்டை அளிப்பதில் ஸொமொட்டோவை விட ஸ்விக்கிக்கு முன்னுரிமை அளித்துள்ள்தாக  தகவல்கள் தெரிவிவிக்கின்றன.

இந்த தகவல்களின் படி சாஃப்ட் வங்கி 300 மில்லியன் டாலர் முதல் 500 மில்லியன் டாலர் வரை ஸ்விக்கியில் முதலீடு செய்ய உள்ளது