மும்பை

காராஷ்டிர மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து 40 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நீதிபதியம் மஜத தலைவருமான கோல்சே பாடில் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத் நகரில் உள்ள ரேலாப்ஸ் டெக்னாலஜீஸ் என்னும் நிறுவனம் மிஸ்ஸிங் வொட்டர்ஸ் ஆப் என்னும் செயலியை உருவாக்கி உள்ளது. இதன் மூலம் மக்கள் தங்கள் பெயர் வாக்காளர்கள் பட்டியலில் உள்ளதா என்பதை கண்டறிய முடியும். அத்துடன் பெயர் விடுபட்டவர்களை கண்டறியும் கட்சி தொண்டர்கள் மீண்டும் அவர்களைஇணைக்கவும் முடியும்.

அது மட்டுமின்றி புதிய வாக்காளரகளும் தங்கள் பெயரை இந்த செயலி மூலம் வாக்காளர் பட்டியலில் இரு நிமிடங்களில் இணைக்க முடியும்.  இந்த நிறுவனம் சமீபத்தில் இந்த செயலி மூலம் மகாராஷ்டிர மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டவர்கள் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது.

இது குறித்து முன்னாள் மும்பை நீதிமன்ர நீதிபதியும் மஜத செயலருமான கோல்சே பாடில், “ஐதராபாத் நகரில் உள்ள நிறுவனத்தின் செயலி மூலம் மகாராஷ்டிராவில் மட்டும் 39,27, 882 வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இது மகாராஷ்டிர மாநிலத்தின் மொத்த வாக்காளர்களில் 4.6 % ஆகும்.

இதில் 17 லட்சம் பேர் தலித்துகள், 10 லட்சம் பேர் இஸ்லாமியர்கள். தேர்தல் வெற்றிக்காக பாஜக இந்த வாக்காளர்கள் பெயரை நீக்க நடவடிக்கை எடுத்திருக்கலாம் என சந்தேகமாக உள்ளது. இவ்வாறு பெயர்கள் நீக்கப்பட்டது நாடெங்கும் நடந்துள்ளது.” என கூறி உள்ளார்.