சென்னை:  தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகளைத் தொடர்ந்து வெளியான வரைவு வாக்காளர் பட்டியலுக்கு பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9 லட்சத்து 14 ஆயிரத்து 931 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 97,37,832 பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ள நிலையில் (அதாவது 15.18% வாக்காளர்கள் நீக்கம்) மாநிலம் முழுவதும், இதுவரை 9.14 லட்சம் பேர் மட்டுமே தங்களது பெயர்களை மீண்டும் சேர்க்கக்கோரி விண்ணப்பித்து உள்ளனர்.

தமிழ்நாட்டில், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு போலி வாக்காளர்கள், வெளிநாட்டு அகதிகள் சட்டவிரோதமாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதை நீக்கும் வகையில்,  வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிரத் திருத்தத்தம் (SIR – Special Intensive Revision)  மேற்கொள்ளப்பட்டது. . இதன்முலம் போலி வாக்காளர்கள், அகதிகளின் வாக்காளர்கள் உரிமை உள்பட 97 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.  இவர்களில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டு உள்ளனர்.  இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இருந்தாலும் தேர்தல் ஆணையம் தனது நிலையில் இருந்து பின்வாங்காமல்  தீவிர வாக்காளர் சீர்திருத்தம் பணியை மேற்கொண்டது.

இதைத்தொடர்ந்து பெயர் விடுபட்டவர்கள் அதற்கான ஆவனங்கள் மூலம் விண்ணப்பிக்க ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக சனி, ஞாயிறு நாட்களில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. அதன்படி 4 நாட்கள் சிறப்பு முகாம்கள்   நிறைவடைந்துள்ளது.  . இந்தநிலையில், சென்னை மாவட்டத்திலுள்ள 16 சட்டசபை தொகுதிகளுக்கான 4 ஆயிரத்து 79 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வது தொடர்பான சிறப்பு தீவிர முகாம் கடந்த டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் நடத்த தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி  சிறப்பு முகாம்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத 18 வயது நிரம்பிய தகுதியுடையவர்கள் படிவம் 6-ஐ உறுதிமொழி படிவத்துடனும், இறந்தவர்களின் பெயர்களை நீக்க படிவம் 7-ஐ, முகவரி மாற்றம், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்ய, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கைக்காக படிவம்-8ஐ ஆர்வமுடன் அளித்தனர்.

புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர்கள் பிறப்பு சான்றிதழ் அல்லது கல்வி சான்று, ஆதார் அட்டை, 2005-ம் ஆண்டுக்கான பெற்றோர் வாக்காளர் அடையாள அட்டையின் விவரங்கள் சமர்ப்பித்தனர்.

வீடுகளை மாற்றிக் கொண்டு இடமாறி சென்ற வாக்காளர்கள், அந்த இடத்திற்கான வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் தங்களை வாக்காளராக மீண்டும் சேர்த்துக் கொள்வதற்காக படிவம் எண் 6ஐ அளித்தனர்.

இந்தப் படிவங்களை வாங்கும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் உதவி புரிந்தனர்.

தமிழகத்தில் தி.மு.க.விற்கு 68 ஆயிரத்து 286, அ.தி.மு.க.விற்கு 67 ஆயிரத்து 286, பா.ஜ.க.விற்கு 61 ஆயிரத்து 438, காங்கிரசிற்கு 30 ஆயிரத்து 592 தேர்தல் முகவர்கள் உள்ளனர்.

அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர்களிடம் சென்று அவர்களிடம் படிவத்தை பூர்த்தி செய்து வாங்கி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பித்து வருகின்றனர்.

தமிழகத்தில் 4 நாட்கள் நடந்த முகாம் நிறைவடைந்துள்ளது. இதில் கடந்த மாதம் 19-ந்தேதியிலிருந்து கடந்த 3-ந்தேதி இரவு 8 மணி வரை 18 வயது நிரம்பிய தகுதியுடைய 9 லட்சத்து 14 ஆயிரத்து 931 பேர் படிவம் 6, 6 ஏ அளித்தனர். 

இதேபோல இறந்துபோன, 13ஆயிரத்து 457 பேரின் பெயர்களை நீக்குவதற்கு அவர்களின் குடும்பத்தினர் படிவம் 7-ம் அளித்தனர். தொடர்ந்து வருகிற 18-ந் தேதி வரை விண்ணப்பிக்க முடியும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

இந்த முகாமில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்காக சிறப்பு தீவிர முகாமை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் மீண்டும் ஒரு வாய்ப்பை அளிக்குமா? என்பது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்து அறிவிக்கும் என்று தேர்தல் அதிகாரிகள் கூறினர்.

தமிழ்நாட்டில் 97.37 வாக்காளர்கள் நீக்கம்: வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தேர்தல் ஆணையர் அர்சனா பட்நாயக்…

வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள்! அர்ச்சனா பட்நாயக்

[youtube-feed feed=1]