சென்னை:  தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில், இதுவரை (ஜூன் 30ம் தேதி நிலவரம்)  31.40 லட்சம் பேர் வேலை கேட்டு பதிவு செய்துள்ளனர் சென தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு வேலைகளுக்காக, மாநிலம் முழுவதும் இளைஞர்கள் சமுதாயம் பதிவு செய்ய மாவட்டந்தோறும், அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறதுமு. அதனப்டி, இதுவரை வேலை கேட்டு, அரசு வேலை வாய்ப்புத் துறை இணையதளத்தில் ஜூன் 30ம் தேதி நிலவரப்படி  31.40 லட்சம் பேர் வேலை கேட்டு பதிவு செய்துள்ளனர்.

இவர்களில் 14.09 லட்சம் பேர்  ஆண்கள்; 17.31 லட்சம்  பேர் பெண்கள்; மூன்றாம் பாலினத்தவர் 257  என மொத்தம் 31.40 லட்சம் பேர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவர்களில் 6.03 லட்சம் பேர் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள். 19 முதல் 30 வயது வரையுள்ள பல தரப்பட்ட கல்லுாரி மாணவர்கள் 12.26 லட்சம் பேர்,  31 முதல் 45 வயது வரை உள்ளோர் 10.75 லட்சம்; 46 முதல் 60 வயது வரை உள்ளவர்கள், 2.36 லட்சம்; 60 வயதுக்கு மேற்பட்டோர் 8791 பேர்.

மார்ச்சில் 32.35 லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்திருந்தனர். கடந்த மூன்று மாதங்களில் பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 95,742 குறைந்துள்ளது.

பதிவு செய்துள்ளவர்களில் 1.53 லட்சம் பேர் மாற்றுத்திறனாளிகள் என்றும் வேலை வாய்ப்பு துறை தெரிவித்துள்ளது.