சென்னை:
சமூக நீதிக் கண்காணிப்புக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சமூக நீதி அரசாணையின் நூற்றாண்டு நாளான கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு இருந்த அறிக்கையில், சமூக நீதி அளவுகோலானது சட்டப்படி இருக்கிறது. ஆனால் முழுமையாகச் செயல்படுத்தப் படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காகத் தமிழக அரசால் ஒரு கண்காணிப்புக் குழு அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், சமூக நீதிக் கண்காணிப்புக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவராக சுப. வீரபாண்டியன் மற்றும் உறுப்பினர்களாக, முனைவர் கே. தனவேல், முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ், கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஏ.ஜெய்சன், முனைவர் ஆர். இராஜேந்திரன், கோ. கருணாநிதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.