சென்னை: “சமூக விடுதலையிலும் தேச விடுதலையிலும் முதல் குரல் தமிழகத்தில் இருந்தே ஒலித்திருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், “சமூக விடுதலையிலும் தேச விடுதலையிலும் முதல் குரல் தமிழகத்தில் இருந்தே ஒலித்திருக்கிறது. தமிழக விடுதலை வீரர்களின் திருவுருவச் சிலைகள் உள்ள அலங்கார ஊர்திகளை டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறாமல் தடுக்கலாம்; ஆனால் இன்று நம் வரலாற்றைச் சுமந்து தமிழ்நாடெங்கும் செல்கிறது.
வீரம் செறிந்த நமது வரலாறு ஒளி மிகுந்த சூரியன் போல் நமது நெஞ்சங்களில் என்று சுடர்விட்டுக் கொண்டே இருக்கும்! யாராலும் மாற்றவோ மறைக்கவோ தடுக்கவோ முடியாது என தெரிவித்து உள்ளார்.
Patrikai.com official YouTube Channel