சென்னை: தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளில் நிகழாண்டு இதுவரை 3.23 லட்சம் மாணவா்கள் சோ்ந்துள்ளனா் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்றதும், தமிழக மாணவர்களிடையே கல்வியை மெருகேற்றும் வகையில், மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், மாணவ மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு சலுகைகளை வழங்கி உள்ளது. இதனால், அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
இதைத்தொடர்நது, நடப்பாண்டு, தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 5 லட்சம் மாணவர்கள் சேர்க்க இலுக்கு நிர்ணயித்து பள்ளிக்கல்வித்துறை செயலாற்றி வருகிறது. மாணவர்கள் சோ்க்கை தொடா்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் சுற்றறிக்கை: பொது சுகாதாரத் துறை மூலம் 2018-ஆம் ஆண்டு தமிழகத்தில் பிறந்த குழந்தைகளின் புள்ளி விவரம் பெறப்பட்டு அவை பள்ளிகளுக்கு எமிஸ் தளம் வழியாக அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்படி, வரும் கல்வியாண்டுக்கான(2024-2025) மாணவா் சோ்க்கைப் பணிகள் கடந்த மாா்ச் 1 முதல் தொடங்கப்பட்டன. இதுவரை 3.23 லட்சம் மாணவா்கள் வரை இணைந்துள்ளனா். மேலும் மாணவர்களை சேர்க்கும் வகையில், பள்ளிக்கல்வியின் உதவி மைய எண்ணில்(14417) இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெற்றோா்களிடம் பேசப்பட்டுள்ளது. 5 வயதான குழந்தைகளை பள்ளியில் சோ்க்க வேண்டும் என்பதற்காக பல்வேறு பணிகள் தமிழக அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பெற்றோா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி மாணவா்களை பள்ளியில் சோ்க்க நடவடிக்கைகள் விரைவுபடுத் தப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.