ஜூன் 30 ம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரையில் இதுவரை 50000 பேர் பனி லிங்க தரிசனம் செய்துள்ளனர்.

நேற்று ஒரேநாளில் 17,000 பேர் தரிசனம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகவதி நகர் முகாமில் இருந்து இருவேறு வழித்தடங்களில் பக்தர்கள் அமர்நாத் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

பைதல் மற்றும் பகல்காம் ஆகிய இரண்டு வழிகளில் செல்லும் பக்தர்களில் பைதலில் இருந்து 14 கி.மீ தொலைவில் உள்ள அமர்நாத் கோயிலுக்கு ஒரேநாளில் சென்று வர முடியும்.

பகல்காமில் இருந்து 48 கிலோ மீட்டர் தொலைவு என்பதால் இந்த வழியே சென்று வர நான்கு நாட்கள் வரை ஆவதாக தெரிவித்துள்ளனர். இவ்விரு வழித்தடத்தில் ஹெலிகாப்டர் சேவை வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இன்று ஜூலை 4 ம் தேதி பைதல் வழியாக 2895 பேரும் பகல்காம் வழியாக 4,381 பேர் என மொத்தம் 7276 பேர் பகவதி நகர் முகாமில் இருந்து அமர்நாத் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.