தமிழ்நாட்டில் கொரோனா 3வது அலை பரவலுக்கான அறிகுறி இல்லை! ஜெ.ராதாகிருஷ்ணன்

Must read

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா 3வது அலை பரவலுக்கான அறிகுறி இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் இன்று 6வது மெகா தடுப்பூசி முகாம் இன்று காலை 7மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை தடுப்பூசி முகாம்களை பார்வையிட்ட தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது. மழை காலங்களில் பரவும் நோய்களில் இருந்தும் மக்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது.

தமிழகத்தில் இன்று நடைபெறும் 6ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் மூலம் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள 1.40 கோடி முதியவர்களில் 47 லட்சம் பேர் மட்டுமே கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். 2-வது தவணை தடுப்பூசியை 22 லட்சம் முதியவர்கள் மட்டுமே போட்டுள்ளனர். இறப்பு விகிதம் அதிகமுள்ளோர் கொரோனா தடுப்பூசி போடாமல் இருப்பது சரியல்ல.

பல்வேறு நாடுகளில் கரோனா மூன்றாம் அலைக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன. இதனிடையே, தமிழகத்திலும் மூன்றாம் அலை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என பலர் கேள்வி வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் இதுவரை கொரோனா 3-வது அலைக்கான அறிகுறிகள் இல்லை. அறிகுறிகள் இல்லை என்றாலும் 3-வது அலை வராது என்று கூற இயலாது. மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article