டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,326 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதுடன், சிகிச்சை பலனின்றி 666 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் 17,677 பேர் குணமடைந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8 மணி வரையிலான கொரோனா நிலவரம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி,  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் புதிதாக 16,326 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

நேற்று ஒரே நாளில் மேலும் 666 பேர் தொற்றுபாதிப்பு காரணமாக உயிர் இழந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 453708 ஆக உயர்ந்தது.

கடந்த 24மணி நேரத்தில் தொற்றில் இருந்து  17677 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 33532126 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 173728 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் 68,48,417 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,01,30,28,411 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 59,84,31,162 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் 13,64,681 மாதிரிகள் சோதனை நடத்தப்பட்டுள்ளது என ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.