சென்னை:
அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாகச் சென்னையில் இதுவரை 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காற்று மற்றும் ஒலி மாசு ஏற்படுவதாகக் கூறி, உச்சநீதிமன்றம் பட்டாசு வெடிக்கத் தடை விதித்துள்ளது. மேலும் பசுமை பட்டாசுகள் தயாரித்து வெடிக்கலாம் என்றும், அதற்கும் நிபந்தனைகளையும் அறிவித்து உள்ளது. மாசு காரணமாக சில மாநிலங்கள் முழுமையாகப் பட்டாசு வெடிக்கத் தடை விதித்துள்ளது.
இதன் காரணமாகத் தமிழகத்தில் பட்டாசு தொழிலை நம்பி வாசும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து மேல்முறையீடு செய்தும் அதைக் கண்டுகொள்ளாதா உச்சநீதிமன்றம் தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கத் தடை விதித்துள்ளது.
அதன்படி, தீபாவளி அன்று காலை 6-7 மணி வரை ஒரு மணி நேரமும், இரவு 7-8 மணி வரை மேலும் ஒரு மணி நேரம் என மொத்தம் 2மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாகச் சென்னையில் இதுவரை 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.