சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இதுவரை 2.90 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர் என உயர்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

கடந்த ஆண்டில் 2.53 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே வந்திருந்த நிலையில், இந்த ஆண்டு கூடுதலலாக 40ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதன்மூலம் பொறியியல் படிப்புக்கு இளைய தலைமுறையினரிடையே மீண்டும் பெரும் வரவேற்பு கிட்டியுள்ளது தெரிய வந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பிப்பம் செய்தும் நடவடிக்கை  மே மாதம்  7 ஆம் தேதி தொடங்கியது.  இது ஜுன் 6ந்தேதியுடன் (இன்ற)  முடிவடைகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முழுவதும்  440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அதில் அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரி, அரசு கல்லூரி, அரசு நிதியுதவி பெறும் கல்லூரி, தனியார் சுயநிதி கல்லூரி ஆகிய அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும். இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 7 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் மாணவர்வள் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்து உள்ளனர். ஜுன் 5ந்தேதி மாலை நிலவரப்படி  2.90 லட்சம் பேர் விண்ணப்பம்  செய்துள்ளனர். அதாவது,  2 லட்சத்து 95 ஆயிரத்து 134 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர்களில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 732 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியிருப்பதாகவும் உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பொறியியல் விண்ணப்பிப்பதற்கான காவல அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை விண்ணப்பம் செய்யாதவர்கள், இன்று மாலைக்கு,   www.tneaonline.org என்ற இணையதள இணைப்பை பயன்படுத்தி விரைவாக விண்ணப்பித்து 9 ஆம் தேதிக்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உயர்கல்வித் துறை அறிவித்து உள்ளதுமு.

மேலும்,  விண்ணப்ப செயல்முறையை முடிக்க மாணவர்களுக்கு உதவ, உதவி மையங்கள் மற்றும் கட்டணமில்லா உதவி எண் வழங்கப்பட்டுள்ளன. 1800 425 0110 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை தெளிவுபடுத்தி கொள்ளலாம். விண்ணப்ப பதிவு செய்துள்ள மாணவ மாணவிகளுக்கு ரேண்டம் எண் வெள்யிடப்பட்டு, அவர்களுக்கான தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும்.

இதையடுத்து கவுன்சிலிங்  நடத்தப்படும். முதலில்,  விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். அதன் பிறகு பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும். விருப்ப கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும். குறிப்பிட்ட நாட்களுக்குள் அவர்கள் அதனை உறுதி செய்ய வேண்டும்.