டில்லி
இதுவரை வழங்கப்பட்ட ஆதார் அட்டைகளின் எண்ணிக்கை குறித்து மாநிலங்கள் அவையில் அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆகிர் தகவல் அளித்துள்ளார்.
தற்போது நடந்து வரும் பாராளுமன்றத் தொடரில் மக்கள் தொகை மற்றும் ஆதார் அட்டைகள் எவ்வளவு வழங்கப்பட்டது என்பது குறித்து எழுத்து பூர்வமான கேள்விகள் எழுப்பபட்டிருந்தன. அந்த கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் ஹன்ஸ் ராஜ் ஆகிர் பதில் அளித்தார்.
அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆகிர், “கடந்த 2011 ஆம் வருடம் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இந்திய மக்கள் தொகை 121,08,54,997 ஆக இருந்தது. அதற்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவிலை. அதன் பிறகு ஒரு வருடத்தில் 2,08,98,228 குழந்தைகள் பிறந்துள்ளன. அத்துடன் வருடத்துக்கு 20.4% குழந்தைகள் பிறந்துள்ளன. அத்துடன் 6.4% பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதுவரை மொத்தம் 122.90 கோடி ஆதார் அட்டைகள் அளிகப்பட்டுள்ளன. அதில் 6.71 கோடி ஆதார் அட்டைகள் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் 29.02 கோடி ஆதார் அட்டைகள் 5 முதல் 18 வயது வ்ரை உள்ளோருக்கு வழங்கப்பட்டுள்ளன” என தனது பதிலில் தெரிவித்துள்ளார்.