ஈரோடு
இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
அடுத்த மாதம் 5 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ந்தேதி முதல் தொடங்கி வருகிற 17-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
முதல் நாளில் சுயேச்சை வேட்பாளர்கள் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்பு மனுத் தாக்கல் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி,காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை நடக்கிறது. தேர்தலில் போட்டியிட பொது பிரிவு வேட்பாளர்கள் ரூ.10 ஆயிரமும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவை சேர்ந்த வேட்பாளர்கள் ரூ.5 ஆயிரமும் ‘டெபாசிட்’ தொகையாக செலுத்த வேண்டும்.
நேற்று முன்தினமும், நேற்றும் விடுமுறை தினம் என்பதால் 2-வது நாளாக இன்று (திங்கட்கிழமை) வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. -இன்று ராஜசேகர், நூர் முகமது, கோபாலகிருஷ்ணன், முகமது கைபீர், தர்மலிங்கம், தனஞ்செயன், இசக்கிமுத்து, ஆனந்தன், பானை மணி உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன்படி ஈரோடு கிழக்கில் இதுவரை 12 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.