டெல்லி

துவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1009 ஆகி உள்ளது

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவின் வுகான் நகரில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டு பின்னர், அது உலக நாடுகளுக்கு பரவியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பிறகு கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி 2 கட்டங்களாக போடப்பட்டு பரவல் கட்டுக்குள் வந்தது.

ஆனால் , கடந்த 10 நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இதுபற்றி, ,

”இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,009 ஆக உயர்வடைந்து உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 45 லட்சத்து 11 ஆயிரத்து 545 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 5 லட்சத்து 33 ஆயிரத்து 673 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை நாட்டில், 220 கோடியே 68 லட்சத்து 94 ஆயிரத்து 861 டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது ”

என்று  தெரிவித்துள்ளது.